Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

3.5 லட்சம்… “அமெரிக்காவை சேர்ந்த பெண் போல் பழகி”… வாலிபரை மோசம் செய்த இளம்பெண்..!!

ஃபேஸ்புக் மூலம் அமெரிக்கா பெண் போல பழகி இராமநாதபுரத்தை சேர்ந்த வாலிபரிடம் 3.5 லட்சம் மோசடி செய்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் தாமரைக் குளம் அருகே உள்ள இரட்டைஊரணி மேற்கு தெருவை சேர்ந்த சிவஹரி என்பவர் குவைத் நாட்டில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பேஸ்புக் மூலம் அமெரிக்காவை சேர்ந்த கிளாரா என்ற பெண் ஒருவரின் நட்பு கிடைத்துள்ளது. நீண்ட நாட்கள் இவர்கள் இருவரும் பேஸ்புக்கில் தொடர்பில் இருந்துள்ளனர். இந்நிலையில் அமெரிக்க பெண் தனது தந்தையின் உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும், சிறுநீரக மாற்று அறுவை செய்ய வேண்டும் என்று டாக்டர் கூறியுள்ளதாகவும் தெரிவித்தார்.

மாற்று சிறுநீரகம் ஏற்பாடு செய்து விட்டதாகவும், அறுவை சிகிச்சைக்கு உரிய தொகை செலுத்த வேண்டும் என்பதால் தந்து உதவினால் சென்னைக்கு வரும்போது கட்டாயம் திருப்பி தந்து விடுவதாக கூறியுள்ளார். இதை நம்பி ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் 28ம் தேதி வரை நான்கு தவணைகளாக 3 லட்சத்து 52 ஆயிரத்து ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் அவர் அனுப்பியுள்ளார். பணத்தை பெற்றுக்கொண்டு தனது பேஸ்புக் இணைப்பை துண்டித்து விட்டார். இதனால் சந்தேகம் அடைந்த அந்த நபர் பண மோசடி தொடர்பாக சிபிஐ அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலம் புகார் ஒன்றை அளித்தார்.

அதன் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்ட எஸ்பி கார்த்திக் உத்தரவின்படி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பெண் அமெரிக்காவிலிருந்து பேசினாரா? அல்லது அமெரிக்காவில் இருந்து பேசுவதுபோல் ஏமாற்றி நடித்தாரா? என்பது விசாரித்து வருகின்றனர். அந்த பெண் வழங்கிய வங்கி கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் விசாரணை நடத்தினர். வெளிநாட்டில் பணிபுரியும் ராமநாதபுரத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரிடம் அமெரிக்கா பெண் போல் பழகி பேஸ்புக் மூலம் நிதி மோசடி செய்த சம்பவம் ராமநாதபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |