சர்வதேச புகழ்பெற்ற தென் கொரிய இயக்குனர் கிம் கி டுக் கொரோனா தொற்று காரணமாக காலமானார்.
சர்வதேச புகழ்பெற்ற தென் கொரிய இயக்குனர் கிம் கி டுக் (59) கொரோனா தொற்று காரணமாக மரணமடைந்துள்ளார். இந்த செய்தி பாலிவுட் முதல் கோலிவுட் பிரபலங்கள் வரை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இயக்குனர் கிம் கி டுக் 3அயர்ன் ,ப்ரீத், மோபியஸ், ஸ்பிரிங், பேட் கய் உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியவர். இவர் வெனிஸில் நடந்த 69-வது திரைப்பட விழாவில் கோல்டன் லயன் விருதை பெற்றார் . மேலும் 61 ஆவது வெனிஸ் விருது விழாவில் 3 அயர்ன் படத்திற்காக சில்வர் லையன் விருதை பெற்றார்.
#KimKiDuk RIP
Ur a Great inspiration sir , great loss to world cinema pic.twitter.com/K9BqzYGzGd— atlee (@Atlee_dir) December 11, 2020
இதையடுத்து கான்ஸ் திரைப்பட விழா, பெர்லின் திரைப்பட விழா என ஏகப்பட்ட விருது விழாக்களில் சிறந்த இயக்குனருக்கான விருதுகளை பெற்று பிரபலமடைந்தார். கடந்த நவம்பர் மாதம் லட்வியா நாட்டில் வீடு வாங்க சென்றிருந்த கிம் கி டுக் அதன் பின்னர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை . அவரது நண்பர்கள் அவரைத் தேடிய நிலையில் கொரோனா காரணமாக அனுமதிக்கப் பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி கிம் கி டுக் காலமானார். இதையறிந்த இயக்குனர் அட்லி ‘எல்லோருக்கும் மிகப் பெரிய இன்ஸ்பிரேஷன் சார் நீங்க. உலக சினிமாவுக்கு பேரிழப்பு’ என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.