நடிகர் அதர்வா நடிப்பில் தயாராகியுள்ள ‘குருதி ஆட்டம்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் நடிகர் அதர்வா வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர் . இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த 100 திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தது . இதையடுத்து ஜிகர்தண்டா திரைப்படத்தில் தெலுங்கு ரீமேக்கில் நடிகர் சித்தார்த் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார்.
தற்போது நடிகர் அதர்வா நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் குருதி ஆட்டம் . இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். மேலும் ராதிகா , ராதாரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது .