உலகம் முழுவதும் இந்த வருடம் கொரோனா பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் தொழிற்சாலைகள் முழுமையாக இயங்கவில்லை. வாகனப் போக்குவரத்தும் முற்றிலும் குறைந்தது. இதனால் நச்சு வாயுவான கார்பன் டை ஆக்சைடு வாயு உமிழ்வு பெருமளவு குறைந்துள்ளது. கடந்த வருடம் 640 கோடி டன் கார்பன்டை ஆக்ஸைடு வளிமண்டலத்தில் கலந்துள்ளது. ஆனால் இந்த வருடம் 3400 கோடி டன்னாக குறைந்துள்ளதாகவும், உலகளாவிய கார்பன் உமிழ்வு குறித்து குளோபல் கார்பன் திட்டம் தனது ஆய்வு முடிவு மற்றும் மதிப்பீடுகளை வெளியிட்டுள்ளது.
இந்த வருடம் கார்பன் உமிழ்வை பொருத்தவரை அமெரிக்காவில் 12% குறைந்துள்ளது, ஐரோப்பிய ஒன்றியத்தில் 11% குறைந்துள்ளது. சீனாவில் பொருளாதார மீட்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பதால், 2020ஆம் வருடத்தில் கார்பன் உமிழ்வு வெறும் 1.7 % மட்டுமே குறையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் உலகளவில் கார்பன் உமிழ்வு குறைந்ததற்கு காரணம் கொரோனா உச்சத்தில் இருந்த ஏப்ரல் மாதத்தில் வாகனங்களின் போக்குவரத்து முற்றிலும் இல்லாததே ஆகும்.