கழுதை பாலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதால் கொரோனாவை கட்டுப்படுத்துவதாக கூறப்படுகின்றது.
அல்பேனியா நாட்டின் பண்ணைகளில் தற்போது கழுதை பால் வாங்க வருபவர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால் கழுதை பாலுக்கு டிமாண்ட் அதிகரித்துள்ளது. மேலும் கழுதை பாலில் அதிகமான சத்துக்கள் இருப்பதால், இதை தேடி மக்கள் திரளாக வருகின்றனர். கழுதைப்பாலில் அதிகமான வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் இது நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுவதாகவும் நம்பப்படுகிறது. எனவே தற்போதுள்ள கொரோனா போன்ற கொள்ளை நோயில் இருந்து தங்களைப் பாதுகாத்து கொள்ள சத்தான உணவுகளை மக்கள் சாப்பிடுகின்றனர்.
இந்நிலையில் கழுதைப்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பதால், அதற்கு மக்களிடையே மவுசு அதிகரித்துள்ளது. இந்த சூழலில் கழுதை பாலுக்கு டிமாண்ட் ஆக இருப்பதால், அதற்கு ஏற்ப கழுதைப் பாலின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. எனவே கழுதை பண்ணை வைத்திருப்போருக்கு இது சரியான மகிழ்ச்சியான காலம் தான். பண்ணையாளர்களுக்கு மட்டுமல்ல கழுதைகளுக்கு இது ஒரு சந்தோஷமான காலம் தான். ஏனெனில் சுமைகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் கழுதைகள் தற்போது பண்ணைகளில் வைக்கப்பட்டு ராஜா மரியாதை செய்வது போல தீனி போட்டு பராமரித்து வருகின்றனர்.