தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு ஒரு நாளைக்கு ஐந்து வகுப்புகள் ஆன்லைன் மூலமாக நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பள்ளிகள் திறப்பது பற்றி எந்த ஒரு அறிவிப்பும் தற்போது வரை வெளியிடப்படவில்லை. இதனையடுத்து கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மற்ற வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் ஒரு நாளைக்கு ஐந்து வகுப்புகள் மட்டுமே ஆன்லைனில் நேரடியாக நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பில் இறுதியாண்டு தவிர்த்து பிற மாணவர்களுக்கு ஆன்லைனில் 5 வகுப்புகள் நடத்தப்படும். மூன்று பாட வகுப்புகள் ஆன்லைனில் நேரடியாக இல்லாமல் தொடர்பு வகுப்புகளாக நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது.