நடிகர் ரஜினிகாந்தின் எழுபதாவது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்
தமிழகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரஜினிகாந்தின் 70வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனால் பல்வேறு தரப்பினர் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் வாழ்த்தினை தெரிவித்து உள்ளார்கள்.
தனது ட்விட்டர் பக்கத்தில் முதல்வர் “திரு ரஜினிகாந்த் அவர்கள் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ எனது உளமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
திரு @rajinikanth அவர்கள் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ எனது உளமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) December 12, 2020