Categories
தேசிய செய்திகள்

சுங்கச்சாவடியை கைப்பற்றும் விவசாயிகள் – டெல்லி போராட்டம் தீவிரம்…!!

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 17 வது நாளாக போராடிவரும் விவசாயிகள் டெல்லியில் இருக்கும் முக்கிய சுங்க சாவடிகளை கைப்பற்ற திட்டமிட்டுள்ளனர்.

டெல்லியில் அமைந்துள்ள கெரிக்கிதுவாலா சுங்கச்சாவடி வழியாக பஞ்சாப் ராஜஸ்தான் போன்ற இடங்களுக்கு செல்ல முடியும். இந்த சுங்க சாவடி மூன்று மாநிலங்களை நேரடியாக இணைக்கிறது. எனவே தான் இந்த சுங்க சாவடியை விவசாயிகள் கைப்பற்ற திட்டமிட்டுள்ளனர். அவர்களது எண்ணம் நிறைவேறிவிட்டால் மூன்று மாநிலங்கள் மட்டுமல்லாமல் வடமாநிலங்களுக்கு செல்லக்கூடிய பிரதான சாலைகள் அனைத்தும் துண்டிக்கப்படும்.

இதில் மிக முக்கியமானது என்னவென்றால் சுங்கச்சாவடியை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் விவசாயிகள் கட்டணமின்றி வாகனங்கள் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அறிவித்திருந்தனர். அதோடு பொது மக்களுக்கு இன்னல் ஏற்படுத்துவது எங்கள் நோக்கம் இல்லை என்றும் அரசிற்கு எங்கள் கோரிக்கையை வலுவாக வைக்கவே இந்த முடிவு என கூறி உள்ளனர். ஆனால் இதுவரை எந்த விவசாயிகளும் சுங்கசாவடிக்கு  வரவில்லை.

ஆனாலும் பாதுகாப்பு நிமித்தமாக காவலர்கள் பலர் குவிக்கப்பட்டுள்ளனர். தேவைப்பட்டால் குறிப்பிட்ட இடத்தை தடுக்க காவலர்கள் தயார் நிலையில் உள்ளனர். குர்கான் மாவட்டத்தில் மட்டும் 67 சிறப்பு அதிகாரிகள் சுங்கச்சாவடியை கைப்பற்றுவதை தடுக்க நியமிக்கப்பட்டுள்ளனர். அதே போன்று மற்ற சுங்கச்சாவடிகளையும் பாதுகாப்பதற்காக 5000 காவலர்கள் மற்றும் துணை இராணுவப் படையினர் குவிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |