அரசு ஊழியர்கள் அனைவரும் ஜீன்ஸ் மற்றும் டி ஷர்ட் சாதாரண ரப்பர் காலணிகளை அணிந்து அலுவலகத்திற்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் அவர்களின் பதவிக்கு ஏற்றவாறு தகுதியான ஆடைகளை அணிய வேண்டியது மிகவும் அவசியம். எளிமையாக இருப்பதாக வெளிப்படுத்தும் சாதாரண ரப்பர் காலணிகளை அணிந்து அலுவலகம் வரக்கூடாது என்று மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது. இதுபற்றி மகாராஷ்டிரா அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்து அரசு ஊழியர்களும் வாரத்தில் ஒரு நாள் குறைந்தபட்சம் வெள்ளிக்கிழமை கண்டிப்பாக கதர் ஆடைகள் மற்றும் கைத்தறி ஆடைகளை பணிக்கு வர வேண்டும்.
இந்த கட்டுப்பாடு அரசு பணியில் நிரந்தர ஊழியர்களுக்கு மட்டுமே. ஒப்பந்த அடிப்படையில் அரசுக்கு ஆலோசகர்களாக பணியாற்றுவோருக்கு இது பொருந்தாது. மக்களிடத்தில் அரசு ஊழியர்களுக்கான மதிப்பு மிகவும் மோசமாக இருக்கிறது. அதனால் அவர்கள் மத்தியில் நல்ல நடத்தையை ஏற்படுத்தும் வகையிலும் ஆடையில் ஆளுமைத்திறனை உண்டாக்கவும் இந்த ஆடை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அலுவலகத்திற்கு வரும் ஊழியர்கள் சுத்தமான ஆடைகளை அணிந்து வரவேண்டும்.
மேலும் சுகாதாரத்தை பராமரிக்க வேண்டும். சுத்தமில்லாத அழுக்கான ஆடைகளை அணிந்து வருவதை தவிர்க்க வேண்டும். அவ்வாறான ஆடைகள் வேலைத் திறனை பாதிக்கும். பெண் ஊழியர்கள் சுடிதார், புடவை மற்றும் சல்வார் அணிந்து வரலாம். பேண்ட் சட்டை தேவைப்பட்டால் சால் அணிந்து வரலாம். ஆண் ஊழியர்கள் கட்டாயம் பேன்ட் சட்டை மட்டுமே அணிந்து வரவேண்டும்.
அடர் வண்ணத்தில் ஆடைகள், பளிச்சென தெரியும் ஆடைகள், டிசைனில் உள்ள ஆடைகளை அலுவலகத்திற்கு அணிந்து வரக்கூடாது. பேண்ட் மற்றும் டீ சர்ட் போன்றவற்றை அரசு ஊழியர்கள் பணிக்கு வரும் போது அணியக்கூடாது. பெண் ஊழியர்கள் காலணிகள், சாண்டல்கள், ஷு அடையலாம். இது ஆண்களுக்கும் பொருந்தும். ஆனால் சாதாரண ரப்பர் காலணிகளை அணியக் கூடாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.