தமிழகத்தில் மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் 12 இடங்களே கிடைக்கும் என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கூடிய வகையில் தமிழக அரசு சட்டசபையில் மசோதா ஒன்றை நிறைவேற்றியது. அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆனால் அதிலும் சில மாணவர்களும் கட்டணம் செலுத்த முடியாமல் மருத்துவ படிப்பை கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டனர். மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவச் செலவை தாங்களே முழுவதுமாக ஏற்றுக் கொள்கிறோம் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்த அறிவிப்பு மாணவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்திய ஒதுக்கீட்டில் மீதமுள்ள 160 இடங்களில், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் பரண்டு இடங்களே கிடைக்கும் என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. இதனையடுத்து கட்டணம் செலுத்த முடியாமல் காத்திருப்போர் பட்டியலில் உள்ள 51 தமிழக மாணவர்களுக்காக அரசு மருத்துவக் கல்லூரிகளில் தலா இரண்டு இடங்களை அதிகரிக்க முடியுமா? என்பது குறித்து தேசிய மருத்துவ ஆணையம் டிசம்பர் 17ஆம் தேதி பதில் அளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.