பிக்பாஸ் -4 நிகழ்ச்சியில் இன்று வெளியான முதல் புரோமோவில் இந்த வாரம் டபுள் எவிக்ஷன் குறித்து கன்ஃபார்ம் செய்துள்ளார் கமல் .
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் -4 நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த வாரம் மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்று சனம் செட்டி வெளியேற்றப்பட்டார் . இதையடுத்து இந்த வாரம் பிக்பாஸில் இருந்து வெளியேற ரம்யா பாண்டியன், சோம் ,நிஷா ,கேபி ,ரமேஷ் ,சிவானி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டனர். இந்நிலையில் இன்று வெளியான முதல் புரோமோவில் இந்த வாரம் டபுள் எவிக்ஷன் இருப்பதை உறுதி செய்துள்ளார் கமல் .
அதில்’ பலமுறை சொல்லிப் பார்த்துட்டேன் ஜோடியா விளையாடுனா ஜோடியா வெளியே போகவேண்டி வரும், கூட்டமா விளையாடுனா கூண்டோடு கைலாசம் தான் . கேட்ட பாடு இல்லை . இப்ப நீங்க உங்க வேலையை செய்ய ஆரம்பிச்சுட்டிங்க . நான் கேள்விப்பட்ட வரையில் இந்த வாரம் இரண்டு எவிக்ஷன். அதில் ஒன்றை இன்றே செய்வோம்’ என்று கூறியுள்ளார். இதனால் இந்த வாரம் வெளியிறப்போகும் இரண்டு போட்டியாளர்கள் யார்? என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
#BiggBossTamil இல் இன்று.. #Day69 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/R7O1579thA
— Vijay Television (@vijaytelevision) December 12, 2020