இந்த வாரம் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று கமல்ஹாசன் அதிரடியாக தெரிவித்துள்ளார்.
கடந்த அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி தொடங்கிய தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது வெற்றிப் பாதையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. அந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். அந்த நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில், தற்போது வரை அர்ச்சனா, சுசித்ரா ஆகிய 2 பேர் வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே சென்றுள்ளனர். இதனையடுத்து ஒவ்வொரு வாரமும் மக்கள் அளிக்கக்கூடிய வாக்குகளை அடிப்படையாகக் கொண்டே குறைந்த வாக்குகளைப் பெற்ற போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள்.
அவ்வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் குரூப்பிஸம் உள்ளதை குறிப்பிட்டு இன்று வெளியான புரோமோவில் தொகுப்பாளர் கமல்ஹாசன், “ஜோடியா விளையாடினார் ஜோடியா வெளிய போவீங்க”என்று குறிப்பிட்டு இந்த வாரம் இரண்டு எவிக்ஷன் என்பதை உறுதி செய்துள்ளார். மேலும் அதில் ஒன்று இன்று நடக்கும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் நிஷா, ரமேஷ், சோம் ஆகியோரின் இருவர் நிச்சயம் வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.