Categories
தேசிய செய்திகள்

16 வது நாளாக தொடரும் போராட்டம்… இதற்கு முடிவே இல்லையா…? மத்திய அரசே…!!!

டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் இன்று 16வது நாளாக தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் அங்கு ஒன்று திரண்டு இரவு பகல் பாராமல் போராடி வருகிறார்கள். அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை.

அதுமட்டுமன்றி மத்திய அரசு விவசாயிகளுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. இருந்தாலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.இதனையடுத்து நாடு முழுவதும் பாரத் பந்த் போராட்டம் நடந்தது. அதில் லட்சக்கணக்கான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இன்று 16 வது நாளாக போராட்டம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

Categories

Tech |