வெளியில் விரட்டிய கணவரின் வீட்டின் முன்பு மனைவி தன் மகனுடன் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனுப்பூரைச் சேர்ந்த சுபா என்பவருக்கும், ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த ஸ்ரீதர் என்பவருக்கும் சுமார் பதிமூன்று வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களது மகன் தீக்சி கணேஷ். கடந்த வருடம் ஸ்ரீதர், ஹோட்டல் ஒன்று தொடங்கப் போவதாக கூறி சுபாவின் சொந்தக்காரர்களிடம் ருபாய் 10 லட்சம் கடன் வாங்கியுள்ளார்.
இதனிடையே ஸ்ரீதர் வேறொரு பெண்ணுடன் பழகி வந்ததால் அவரது மனைவி மற்றும் மகனை வீட்டிலிருந்து அடித்து விரட்டினார். இந்நிலையில் ஸ்ரீதருக்கு கடன் கொடுத்த உறவினர்கள் சுபாவிடம் பணத்தை திருப்பி கேட்டுள்ளனர். இதனால் சுபா பணத்தை பெற, ஸ்ரீதர் வீட்டிற்கு அவரது மகனுடன் சென்றுள்ளார். ஆனால் அங்கிருந்த ஸ்ரீதர் மற்றும் அவரது தாயார் சுசீலா ஆகியோர் அவர்களை வீட்டிற்குள் அனுமதிக்காமல் விரட்டியடித்துள்ளனர். இதில் ஆத்திரமடைந்த சுபா ஸ்ரீதர் வீட்டின் முன் தன் மகனுடன் போராட்டம் நடத்தினார்.