Categories
சினிமா தமிழ் சினிமா

‘அது உண்மையில்லை’… ரசிகையின் கேள்விக்கு விளக்கமளித்த மாதவன்…!!

சமூக வலைத்தள பக்கத்தில் ரசிகை ஒருவரின் கேள்விக்கு நடிகர் மாதவன் விளக்கமளித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் மாதவன் பல ஹிட் திரைப்படங்களை கொடுத்து அசத்தியவர் . தற்போது இவர் நடிப்பில் ‘மாறா’ திரைப்படம் தயாராகி வருகிறது. இவர் விஞ்ஞானி நம்பி நாராயணின் வாழ்க்கை கதையை மையமாகக் கொண்ட ராக்கெட்ரி படம் ஒன்றை நடித்து இயக்கியுள்ளார். இந்த படம் தமிழ்,தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் சமூக வலைத்தள பக்கத்தில் தனது ரசிகையின் கேள்விக்கு நடிகர் மாதவன் பதிலளித்துள்ளார்.

சமீபத்தில் பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவின் பயோப்பிக்கில் மாதவன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்த படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்க இருப்பதாகவும், ரத்தன் டாடா கேரக்டரில் மாதவன் இருக்கும் புகைப்படமும் வெளியாகி இருந்தது . இது குறித்து கேள்வி எழுப்பிய ரசிகைக்கு ‘அது உண்மை இல்லை . அது ரசிகர்கள் சிலர் உருவாக்கிய போஸ்டர். இப்படி ஒரு படத்தில் நான் நடிக்கவில்லை அதுபற்றி பேச்சுவார்த்தைக்கூட நடக்கவில்லை ‘ என பதிலளித்துள்ளார் மாதவன் .

Categories

Tech |