நடிகர் ரஜினிகாந்த் தன்னை துன்புறுத்தி வருவதாக நடிகை மீரா மிதுன் குற்றம் சாட்டி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 70வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.இதனை அடுத்து நடிகர் ரஜினிகாந்த் புதிய அரசியல் கட்சி பற்றி அறிவிக்க உள்ள நிலையில், இன்று அவரின் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைத்துள்ளது.
இந்நிலையில் ரஜினி தனது பிஆர் குழுவினருடன் சேர்ந்து சமூக ஊடகங்களில் தன்னை துன்புறுத்தி வருவதாக நடிகை மீரா மிதுன் குற்றம் சாட்டியுள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஜெயலலிதா அம்மா இருந்திருந்தால் இந்த ஓல்ட் மேன் ரஜினிகாந்த் இப்படி செய்வாரா?, தமிழ்நாட்டில் குறிப்பாக எனக்கு எதிராக இந்த மாபியா கும்பல் செய்யும் வேலைகள் பற்றி என்னிடம் அனைத்து ஆதாரங்களும் உள்ளன. என் மேல் கையை வைத்தால், நீங்க அவ்வளவுதான். என் தந்தை மணிக்கு நீங்கள் என்ன செஞ்சீங்க நினைவிருக்கா” என்று அவர் எச்சரித்துள்ளார்.