Categories
சினிமா தமிழ் சினிமா

இன்று வெளியேறப் போவது சோமா ? ரமேஷா ?… பரபரப்பா வெளியான மூன்றாம் புரோமோ.‌..!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று வெளியேறப் போவது சோமா ? ரமேஷா ? என்ற பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது மூன்றாவது புரோமோ.

பிக்பாஸ் 4 நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரம் டபுள் எவிக்ஷன் இருப்பதாக முதல் புரோமோவில் கமல்  கூறியிருந்தார். இதையடுத்து வெளியான இரண்டாவது புரோமோவில் நிஷா – அர்ச்சனா இடையே ஏற்பட்ட மோதல் குறித்து கமல் உரையாடினார். இந்நிலையில் தற்போது மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது .

அதில் சுவாரசியம் குறைவாக செயல்பட்ட போட்டியாளரை இன்னொருமுறை தேர்வு செய்யும்படி கமல் கூறுகிறார். இதனால் நிஷா தேர்வு செய்யப்பட்டு ஓய்வறைக்கு அனுப்பப்படுகிறார் . இதன் பின்னர் சோமை ஸ்டோர் ரூமுக்கும், ஜித்தன் ரமேஷை கன்பெக்சன் ரூமுக்கும் போகச் சொல்கிறார். ‘இருவரில் ஒருவர் இன்று வெளியேற்றப்பட்டு இந்த மேடையில் என்னை சந்திப்பீர்கள்’ என்கிறார் கமல். இதனால் கண்டிப்பாக பிக்பாஸ் வீட்டில் இருந்து சோம் அல்லது ஜித்தன் ரமேஷ் ஆகிய இருவரில் ஒருவர் வெளியேறுவது உறுதியாகியுள்ளது .

Categories

Tech |