ஆற்றை வேடிக்கை பார்த்த மாணவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்ன சேலத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் (49). இவருக்கு அனுராதா (41) என்ற மனைவியும், மோகன்ராஜ்(19), அன்புமணி(14) என்ற 2 மகன்களும் உள்ளனர்.கோவிந்தராஜ் இறந்துவிட அனுராதா அவரது இரு மகன்களையும் வளர்த்து வந்துள்ளார்.மோகன்ராஜ் ஒரு தனியார் கல்லூரியில் சுகாதார படிப்பு படித்து வருகிறார். அனுராதா குடும்பத்தினர், உறவினர்களுடன் கள்ளக்குறிச்சி அருகிலுள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு சென்றுள்ளனர். இக்கோவிலுக்கு அருகில் கோமுகி என்ற ஆறு உள்ளது.
இந்நிலையில் ஆற்றை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மோகன்ராஜ் நிலை தடுமாறி தண்ணீரில் விழுந்தார். ஆற்றில் தத்தளித்துக் கொண்டிருந்த அவர், திடீரென நீரில் மூழ்கியுள்ளார். உடனே அங்கிருந்தவர்கள் ஆற்றில் இறங்கி அவரை காப்பாற்ற முயற்சித்தனர். ஆனால் துரதிஷ்டவசமாக அதிக நேர போராட்டத்துக்கு பின்னர் மோகன்ராஜ் சடலமாகத்தான் மீட்கப்பட்டார். இதனை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், மோகன்ராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.