பிரபல நடிகை மதுமிதா நடிகர் விஜய் சேதுபதியின் புதிய படத்தின் படப்பிடிப்பின் போது மயக்கமடைந்துள்ளார்.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘அனபெல் சுப்ரமண்யம்’. இயக்குனர் தீபக் சுந்தர் ராஜன் இயக்கும் இந்த படத்தில் டாப்ஸி, ஜாங்கிரி மதுமிதா, ராதிகா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கடந்த மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜெய்ப்பூரில் தொடங்கியது. அதில் இரவு நேர படப்பிடிப்பில் நடிகை மதுமிதா மயங்கி விழுந்துள்ளார்.
பதறிப்போன படக்குழுவினர் அவருக்கு முதலுதவி செய்து மயக்கத்தை தெளிவித்தனர் . இதன் பின்னர்தான் விரதம் மேற்கொண்ட மதுமிதா நாள் முழுக்க உணவருந்தாமல் படப்பிடிப்பில் நடித்துள்ளது தெரியவந்துள்ளது . அதன் பின்னரும் மதுமிதா தனது காட்சிகளில் நடித்து முடித்த பின்பே சாப்பிட சென்றிருக்கிறார் . படக்குழுவினருக்கு தன்னால் சிறிய அளவில் கூட பாதிப்பு வந்துவிடக்கூடாது என்கிற மதுமிதாவின் எண்ணத்தை படக்குழுவினர் பாராட்டியுள்ளனர் .