Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“அழுகிய நிலையில் கிடந்த தாய், மகள்”… ஓட்டம் பிடித்த கணவன்… விசாரணையில் அம்பலமான உண்மை..!!

சென்னை அருகே தாயும் மகளும் தூக்கில் தொங்கியபடி அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, தரமணி பள்ளிப்பட்டு பகுதியில் வசித்து வந்த தம்பிக்கு கீத கிருஷ்ணன்-கல்பனா அவர்களுக்கும் குனாளிஸ்ரீ(14) மானசா(4) என்று இரண்டு மகள்கள் இருந்தனர். இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அவர்களின் வீடு பூட்டி இருந்தது. மேலும் அங்கிருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியது. இந்நிலையில் சந்தேகமடைந்த உரிமையாளர் கோட்டூர்புரம் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வீட்டின் பூட்டை உடைத்து கதவை திறந்து பார்த்துள்ளனர்.

அப்போது கல்பனா அழுகிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவரது மூத்த மகள் குனாளிஸ்ரீ(14) வாயில் நுரை தள்ளியபடி சடலமாக மீட்கப்பட்டார். சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வீட்டில் இருந்து 2 கடிதங்கள் கைப்பற்றப்பட்டது.

அதில் கோதண்டபாணி மற்றும் சந்திரசேகர் ஆகியோர் தங்களை மோசடி செய்து விட்டதாகவும், தங்கள் தற்கொலை செய்வதற்கு அவர்களை காரணம் என்று கூறி கணவன் கிருஷ்ணன் எழுதியுள்ளார். இந்த சம்பவம் வழக்கு பதிவு செய்த போலீசார் வீட்டில் அருகில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். கீத கிருஷ்ணன் அவரது மனைவியையும் மகளையும் கொலை செய்துவிட்டு போலீசாரை திசை திருப்புவதற்காக கடிதத்தை எழுதி வைத்திருக்கிறார் என்பது தெரியவந்தது. இதனிடையே கல்பனாவின் செல்போனை எடுத்துக்கொண்டு 2வது மகளையும் தூக்கிக்கொண்டு தலைமறைவான கீத கிருஷ்ணனை ஐ.எம்.இ.ஐ நம்பரை வைத்து போலீசார் இன்று காலை கோயம்பேடு அருகே கைது செய்துள்ளனர்.

Categories

Tech |