மனைவி தலையில் கணவன் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
மதுரை பெத்தானியாபுரம் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் வேலாயுதம்-அஞ்சனாதேவி. இவர்களுக்கு திருமணமாகி ஒரு ஆண் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். வேலாயுதம் பெட்டி கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று வழக்கம்போல் பணி முடித்து விட்டு வீட்டிற்கு வந்த வேலாயுதம் உறங்கிக்கொண்டிருந்த மனைவியின் தலையில் கிரைண்டர் கல்லை தூக்கி போட்டுள்ளார்.
இதில் அஞ்சனாதேவி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அஞ்சனாதேவியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வேலாயுதத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.