கொரோனா வைரஸை அடுத்து புதுவித அபூர்வ பூஞ்சை தொற்று தாக்குவதாக அகமதாபாத் மருத்துவர்கள் அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளனர்.
சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கான தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் உலக நாடுகளில் உள்ள அனைத்து ஆராய்ச்சியாளர்களும் ஒரு நொடி கூட வீணடிக்காமல் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள்.
பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிக் கட்ட சோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் அதிகமாகவே உள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. அதன் பிறகு மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்கள் அல்லது கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களை புதுவித அபூர்வ பூஞ்சை தொற்று தாக்குவதாக அகமதாபாத் மருத்துவர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். மேலும் மூக்குத் துவாரங்கள், சைனஸ் பகுதி, கண், நுரையீரல் மற்றும் தாடை பகுதிகளைத் தாக்கும் கோர்மை கோஸிஸ் என்ற இந்த தொற்றால் இறப்பதற்கான வாய்ப்பு 50 சதவீதம் வரை உள்ளதாகவும் எச்சரித்துள்ளனர். இதனால் பொதுமக்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர்.