பிக்பாஸ் -4 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் -4 நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . யாரும் எதிர்பாராத விதமாக இந்த வாரம் டபுள் எவிக்சன் இருப்பதாக கமல் கூறியபோது போட்டியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நேற்றைய எபிசோடில் சோமை ஸ்டோர் ரூம்க்கும் , ஜித்தன் ரமேஷை கன்பெக்சன் ரூமுக்கும் அனுப்பி இருவரில் ஒருவர் வெளியேறப் போவதாக கமல் கூறினார் . பின்னர் கன்பெக்ஷன் ரூமிலிருந்து ரகசிய வழியில் ரமேஷ் வெளியேறினார் . இந்நிலையில் இன்று வெளியேறப்போகும் நபர் யார் ? என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர் .
தற்போது வெளியாகியுள்ள முதல் புரோமோவில் யாரெல்லாம் இருக்கணும்னு நினைக்கிறீங்க? என கமல் கேட்க ரியோ சிவானி பெயரை கூறுகிறார். தனது நெருங்கிய தோழியான நிஷாவை குறிப்பிடாமல் சிவானியை காப்பாற்ற நினைப்பதாக கூறி தான் நடுநிலையாளர் என்பதை வெளிக்காட்ட நினைக்கிறாரா ரியோ? என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து பாலா, சிவானி இருக்க வேண்டும் என்கிறார். கேபி ,நிஷா போக வேண்டும் என்றும் அனிதா ,நிஷா இருக்க வேண்டும் என்று கூறுகின்றனர் . இதனால் பதட்டமாக இருக்கும் போட்டியாளர்களிடம் இதயத்துடிப்பை செக் பண்றீங்களா ? என்கிறார் கமல் .