Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மனைவியின் வளைகாப்பு….. போதையில் வந்த கணவர்…. நேர்ந்த பெருந்துயரம்…!!

 மனைவி வளைகாப்பில் கணவர் தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆழ்வார்திருநகரியைச் சேர்ந்த கூலி தொழிலாளியான ஆறுமுகம் (23). இவர் தற்போது நெல்லை மாவட்டத்தில் உள்ள களக்காடு அருகில் ஜே ஜே நகர் பகுதியில் தன் மனைவியுடன் வசித்து வந்தார். ஆறுமுகம் மதுவிற்கு அடிமையாகி தினமும் மது அருந்தி வந்துள்ளார். இதைத்தொடர்ந்து தன் மனைவியின் வளைகாப்பு விழா அன்றும் மது அருந்தி விட்டு வந்துள்ளார். இதில் கோபமடைந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஆறுமுகத்தை கண்டித்துள்ளனர்.

இதில் மனவிரக்தி அடைந்த அவர் தன் உடல் முழுவதும் மண்ணெண்ணெயை  ஊற்றி தீ பற்ற வைத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், உடல் கருகிய நிலையில் இருந்த அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் களக்காடு காவல்துறையினர் வழக்கை பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |