Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் வீட்டின் முக்கிய விதிமுறையை மீறிய அர்ச்சனா … சுட்டிக்காட்டிய கமல்… வெளியான இரண்டாவது புரோமோ…!!!

பிக்பாஸ் வீட்டின் முக்கிய விதிமுறையை அர்ச்சனா மீறியதாக கமல் கூறும் இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது .

பிக்பாஸ் -4 நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . நேற்று யாரும் எதிர்பாராத விதமாக இந்த வாரம் டபுள் எவிக்சன் இருப்பதாக கமல் கூறியபோது போட்டியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் கன்பெக்ஷன் ரூமிலிருந்து ரகசிய வழியில் ரமேஷ் வெளியேறினார் . இந்நிலையில் இன்று வெளியான முதல் புரோமோவில் யாரெல்லாம் இருக்கணும்னு நினைக்கிறீங்க? என கமல் கேட்க ரியோ ,சிவானி பெயரை கூறுகிறார். இதையடுத்து பாலா ,சிவானி இருக்க வேண்டும் என்கிறார். கேபி, நிஷா போக வேண்டும் என்றும் அனிதா, நிஷா இருக்க வேண்டும் என்று கூறுகின்றனர் .

தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது புரோமோவில் அர்ச்சனா பிக்பாஸ் வீட்டின் முக்கிய விதிமுறையை மீறியதை கமல் சுட்டிக்காட்டுகிறார் . போட்டியாளர்கள் கழுத்தில் தொங்க விடப்பட்டிருக்கும் மைக்கை கழட்டக் கூடாது என்பது பிக்பாஸ் வீட்டின் முக்கிய விதிமுறைகளில் ஒன்று . அதை அடிக்கடி அர்ச்சனா மீறுவதாக கமல் சுட்டிக்காட்டியுள்ளார். சோம், நிஷா மற்றும் சிவானியிடம் பேசும்போது மைக்கை கழட்டி வைப்பதாகவும் இது விதிமுறை மீறல், இதற்கு முன் இப்படி செய்தவர்களை வெளியே அனுப்பியுள்ளோம் என்றும் கடுமையாக பேசுகிறார் கமல் . இன்று அர்ச்சனாவுக்கு கமல் வார்னிங் கொடுத்துள்ளதால் இனி வரும் வாரங்களில் இது போன்ற தவறுகள் பிக்பாஸ் வீட்டுக்குள் நடைபெறாது என்று எதிர்பார்க்கப்படுகிறது .

Categories

Tech |