விவசாயிகள் போராட்டத்தில் மாவோயிஸ்டுகள் ஊடுருவி வருவதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் அங்கு ஒன்று திரண்டு இரவு பகல் பாராமல் போராடி வருகிறார்கள். அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை.
அதுமட்டுமன்றி மத்திய அரசு விவசாயிகளுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. இருந்தாலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து 1200 டிராக்டர்களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லியை நோக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் விவசாயிகள் போராட்டத்தில் மாவோயிஸ்டுகள் ஊடுருவி வருவதால் கலவரம் வெடிக்கலாம் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதனால் பெரும் பரபரப்பு கிளம்பியுள்ளது. இது திட்டமிடப்பட்ட பொய் பிரசாரம், மாவோயிஸ்டுகள் ஊடுருவல் என கூறி விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்க மத்திய அரசு நினைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விரைவில் அமைதியாக போராடி வரும் விவசாயிகள் மீது தடியடி நடத்தப்படலாம் என்று அஞ்சப்படுகிறது.
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதாக போலீசார் தடியடி நடத்தியது குறிப்பிடத்தக்கது.