தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தின் புதிய புகைப்படம் வைரலாகி வருகிறது.
ஏ.எல். விஜய் இயக்கத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் பேசும் படமாக கலவிபடம் உருவாகிக் கொண்டிருக்கிறது. அதன் இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கடந்த வாரம் தலைவி படத்தின் முக்கிய புகைப்படங்கள் சில வெளியிடப்பட்டு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இன்று அச்சு அசலாக ஜெயலலிதாவை போன்ற நடிகை கங்கனா ரணாவத் இருக்கும் புதிய போஸ்டர் வெளியாகி, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சட்டமன்ற தேர்தலுக்கு முன் இப்படத்தை வெளியிட்டால், மக்கள் மத்தியில் ஆளும் அதிமுகவுக்கு செல்வாக்கு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.