சென்னையில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் நாளை முதல் செமஸ்டர் தேர்வு தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கல்லூரி மாணவர்களுக்கு… நாளை முதல்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!
சென்னையில் உள்ள கல்லூரிகளில் ஆன்லைன் செமஸ்டர் தேர்வு நாளை முதல் தொடங்க உள்ளது. அதனால் இணையதள வசதி இல்லாத மாணவர்கள் கல்லூரிக்கு நேரில் சென்று எழுதவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக கல்லூரி மாணவர்களின் படிப்பும் பாதிக்கப்பட்டது. சென்னையில் பல கல்லூரிகளில் இளங்கலை பட்டப் படிப்பில் இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்த தயாராகி வருகின்றன. ஆன்லைன் மூலமாக நடத்தப்படும் இந்த தேர்வுகளில், விடைத்தாள்கள் டிஜிட்டல் முறையிலேயே மதிப்பீடு செய்யப்படும்.
இதனையடுத்து கல்லூரியில் நாளை முதல் தேர்வு தொடங்க உள்ளது. 25 மாணவர்களுக்கு ஒரு கண்காணிப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு 3மணி நேரம் நடைபெற உள்ளது. தேர்வு முடிந்தவுடன், ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். பிற்பகலில் தேர்வுகள் நடைபெறும் என கல்லூரி முதல்வர் ரகுநாதன் அறிவித்துள்ளார்.
சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் 16ஆம் தேதி முதல் தேர்வுகள் தொடங்க உள்ளது. 90 நிமிடங்கள் தேர்வு நடத்தப்பட உள்ள நிலையில் 30 நிமிடங்களுக்கு ஒருமுறை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அனுப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. டிஜி வைஷ்ணவா கல்லூரியில் வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்வதற்கு முன் விடைத்தாள்களை பதிவேற்றம் செய்வதற்கு கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
மேலும் இணையதள வசதி இல்லாத மாணவர்கள் கல்லூரிக்கு நேரில் சென்று எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விடைத்தாள்கள் ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்ய முடியாமல் போனால் தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும் என்று முதல்வர் சந்தோஷ் பாபு தெரிவித்துள்ளார். கல்லூரியில்மாணவர் சேர்க்கை தாமதமானால் முதலாமாண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு அடுத்த மாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.