தோப்பூர் கோர விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
தருமபுரி மாவட்டம், சேலம் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தொப்பூர் கணவாய் பகுதியில் நேற்று மாலை சேலம் நோக்கி அதிவேகமாக வந்து கொண்டிருந்த லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து முன்னர் சென்று கொண்டிருந்த வாகனங்களின் மீது மோதி பாலத்தில் ஏறி நின்றது. சாலை தாழ்வான பகுதி என்பதால் தொடா்ந்து வந்த 12 கார்கள், இரண்டு மினி லாரிகள், ஒரு இருசக்கர வாகனம் உட்பட 15 வாகனங்கள் ஒன்றன் மீது ஒன்றாக மோதிக் கொண்டன.
இந்த விபத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தின் காரணமாக சேலம் நெடுஞ்சாலையில் சுமார் 8 கிமீ தூரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது. தற்போது இதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
https://www.youtube.com/watch?v=GtW7HsdJGgk&feature=youtu.be