கூடைப்பந்து போட்டி நடந்து கொண்டிருக்கும் போதே மைதானத்தில் பிரபல வீரர் ஒருவர் மயங்கி விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் நடந்த கூடைப்பந்து போட்டியின்போது நட்சத்திர வீரர் கேயோண்டோ ஜான்சன் மைதானத்தில் திடீரென சரிந்து விழுந்தார். ப்ளோரிடா ஸ்டேட்டஸ் – புளோரிடா மாநில அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் ஸ்டேட்டஸ் அணிக்காக ஆடிய ஜான்சன் இடைவேளை முடிந்து வீரருடன் களத்திற்கு திரும்பிய போது மயங்கி விழுந்தார். இதையடுத்து மிகவும் கவலைக்கிடமான நிலையில் ஜான்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.