Categories
சினிமா தமிழ் சினிமா

கேபிக்கு சப்போர்ட் செய்த ரியோ… குறும்படம் போட்டுக் காட்டுவாரா கமல் ?… வெளியான மூன்றாம் புரோமோ…!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று வெளியான மூன்றாவது புரோமோவில் டாஸ்கின் போது எதிரணிக்கு ஆதரவாக விளையாடியோர் குறித்து கமல் உரையாடுகிறார் .

பிக்பாஸ் -4 நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . யாரும் எதிர்பாராத விதமாக இந்த வாரம் டபுள் எவிக்சன் இருப்பதாக கமல் கூறியபோது போட்டியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நேற்றைய எபிசோடில்  கன்பெக்ஷன் ரூமிலிருந்து ரகசிய வழியில் ரமேஷ் வெளியேறினார் . இதையடுத்து இன்றைய எபிசோடுக்கான இரண்டு புரோமோக்கள் வெளியாகியிருந்தது .

 

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது புரோமோவில் ரோபோட் அணியையும் மனிதர்கள் அணியையும் தனித்தனியாக உட்கார சொல்கிறார் கமல். டாஸ்கின் போது எதிர் அணிக்கு ஆதரவாக யாரும் விளையாடினார்களா? என கமல் கேட்க பாலா ரியோவின் பெயரை கூறுகிறார். இதையடுத்து ஆரி ‘ரியோவுக்கு அர்ச்சனாவை பிடிக்கும் தனக்கு பிடித்தவர்களை ஹர்ட் செய்ய வேண்டாம்ன்னு நினைக்கிறார் அவர்’ என்று ரியோ பெயரை கூறுகிறார். பின் கமல் ரியோவிடம் ‘கார்டன் ஏரியால தனியா கேபிக்கு என்ன அட்வைஸ் கொடுத்தீங்க ?’ என்று கேட்க ரியோ மற்றும் கேபியின் முகமே மாறுகிறது . இதனை ரியோ ஒத்துக் கொள்வாரா ? அல்லது கமல் குறும்படம் போட்டு காட்டி புரிய வைப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

 

Categories

Tech |