Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சாலையில் திடீரென தீப்பிடித்த கார் -8 பேர் உயிர் தப்பினர்

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் காவல் நிலையம் அருகே கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்ததில் அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் உட்பட 8 பேர் உயிர் தப்பினர்.

சேலம் மாவட்டம் எடப்பாடி நடுத்தெருவில் சேர்ந்த சிவராமகிருஷ்ணன் மற்றும் அவரது நண்பர்கள் 7 பேர் வாடகை காரில் நேற்று மாலை திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு காரில் புறப்பட்டனர். இந்த காரை அதே பகுதியை சேர்ந்த காமராஜ் என்பவர் ஓட்டி வந்தார். கார் ஆத்தூர் காவல் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தபோது  காரின் முன்பக்கம் எஞ்சினில் இருந்து அதிகமான புகை வந்துள்ளது.

இதனால் ஓட்டுனர் காரை நிறுத்தியுள்ளார்.  உடனே காரில் இருந்த அனைவரும் வேகமாக கீழே இறங்கினர். சற்று நேரத்தில் கார் மளமளவென தீ பிடிக்க ஆரம்பித்தது இது குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். ஆனால் கார் முற்றிலும் எரிந்தது. இந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக காரில் வந்தவர்கள் அனைவரும் உயிர் தப்பினர். இந்த சம்பவம் குறித்து ஆத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |