Categories
தேசிய செய்திகள்

கதம்…கதம்…. எல்லாமே முடிஞ்சு போச்சு… இனி ஒன்னும் பண்ண முடியாது…. மத்திய அரசு திட்டவட்டம் …!!

ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படாது என மத்திய நிதித்துறை இணை அமைச்சர் திரு அனுராக் தாகூர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரில் மாவட்ட மேம்பாட்டு கவுன்சில் தேர்தல் நடைபெற்று வருகிறது. குட்கா மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பாஜகவுக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட மத்திய நிதித்துறை இணை அமைச்சர் திரு. அனுராக் தாகூர் ஜம்மு காஷ்மீர் மீண்டும்  சிறப்பு அந்தஸ்து பெற்றுத் தரப் போவதாக பரூக் அப்துல்லா மேகபூபாமுக்தி போன்றோர் பொய் சொல்லி வருவதாகவும்,

இவர்கள் நமது எதிரி நாடுகளின் உதவியை நாடி வருகின்றனர் என்றும் குற்றம் சாட்டினர். காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது முடிந்து போன விவகாரம் என்றும், மீண்டும்  சிறப்பு அந்தஸ்து வழங்கப்படவாய்ப்பேயில்லை என்றும், குடும்ப வளர்ச்சிக்காக மட்டுமே குறிப்பிட்ட கட்சிகள் செயல்படுவதாகவும் அனுராக் தாக்கூர் குறிப்பிட்டார்.

Categories

Tech |