Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! வருத்தம் நீங்கும்…! மகிழ்ச்சி உண்டாகும்…!!

துலாம் ராசி அன்பர்களே…! பெண்கள் மூலம் வெட்டி செலவு அதிகரிக்கும் நாளாக இருக்கும்.

யாரிடமும் எச்சரிக்கை வேண்டும். எந்த ஒரு பொருளையும் கையாளும் பொழுது கவனம் வேண்டும். தேவை இல்லாத பேச்சுக்கு இடம் கொடுக்க வேண்டாம். வாழ்க்கையில் சில மாற்றம் வரக்கூடும். எதையும் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். குடும்பத்தில் மனக்கசப்பு உருவாகலாம். மனைவியிடம் அன்பை வெளிப்படுத்த வேண்டும். அவர்களை கோபத்திற்கு உள்ளாக வேண்டாம். தேவையில்லாத பேச்சுக்கு இடம் கொடுக்காதீர்கள். பிள்ளைகளின் செயல்பாடு மகிழ்ச்சி ஏற்படுத்திக் கொடுக்கும். மனமகிழ்ச்சி பெறுவீர்கள். பயணங்கள் செல்ல நேரிடும். பண விஷயத்தில் எச்சரிக்கை வேண்டும். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். மற்றவர்களுக்கு உதவி செய்யும் பொழுது எச்சரிக்கை வேண்டும். பயணம் தொடர்பான விஷயங்களில் திட்டமிட்டு எதையும் செய்யுங்கள். ஏற்றுமதி துறையில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றமான தருணம் அமையும். ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும். பொன் நகை வாங்கும் யோகம் இருக்கும். வாகனம் வாங்கும் யோசனை மேலோங்கும். சிந்தனைத் திறன் அதிகரிக்கும்.

காதலில் உள்ளவர்களுக்கும் நல்ல நாளாக இருக்கும். மாணவ கண்மணிகளுக்கு நல்ல கல்வியில் ஆர்வம் இருக்கும். வெற்றி செய்திகள் வந்து சேரும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது இளம்பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் இளம் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை தானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடகிழக்கு. அதிஷ்ட எண் 1 மட்டும் 6. அதிர்ஷ்ட நிறம் இளம் பச்சை மற்றும் நீலம் நிறம்.

Categories

Tech |