Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸிலிருந்து இன்று வெளியேறப் போவது நிஷாவா?… வலைத்தளங்களில் கசியும் தகவல்கள்…!!

பிக்பாஸில் டபுள் எவிக்ஷனில் இரண்டாவது நபராக நிஷா வெளியேறியதாக தகவல் கசிந்துள்ளது.

பிக்பாஸ் -4 நிகழ்ச்சியில் முதல் முறையாக ஒரே வாரத்தில் இருவர் வெளியேற்றப்படும் டபுள் எவிக்ஷன் நடைபெறுகிறது . இதில் நேற்று ஜித்தன் ரமேஷ் கன்பெக்சன் ரூமின் ரகசிய வழி மூலம் வெளியேற்றப்பட்டார் . இந்நிலையில் இன்று நிஷா பிக்பாஸில் இருந்து வெளியேறியதாக தகவல் கசிந்துள்ளது.

தனது நகைச்சுவையான நடவடிக்கையாலும் பேச்சுத் திறமையாலும் ரசிகர்களால் கவரப்பட்ட நிஷா தனித்து விளையாடாமல் அர்ச்சனா குரூப்பில் ஒருவராக இருப்பதால் அவருக்கு ரசிகர்கள் ஆதரவு குறைந்துள்ளது . மேலும் இந்த வாரம் நடைபெற்ற ‘புதிய மனிதா’ டாஸ்கில் அர்ச்சனாவிடம் அவரது தந்தை மரணம் குறித்து பேசி அனைவரின் கோபத்தையும் சம்பாதித்துக் கொண்டார் . நேற்றைய எபிசோடிலும் சுவாரஸ்யம் குறைவான போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு ஓய்வறைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். இந்நிலையில் இன்று இவர் வெளியேற்றப்பட்டதாக வெளியான தகவல் உண்மையா ?என்பது இன்றைய எபிசோடில் தான் தெரிய வரும் .

 

Categories

Tech |