Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! முன்னேற்றம் உண்டாகும்…! எதிர்ப்புகள் விலகும்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே…! எதிர்பார்த்த பண வரவில் ஏமாற்றம் மிஞ்சும்.

மனைவியின் உடல்நிலையில் அக்கறை கொள்ள வேண்டும். தேவை என்ன என்று கேட்டு செய்ய வேண்டும். தாய் தந்தையாரின் உடல் நிலையில் அக்கறை வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். தொழிலில் புதிய யோசனைகளை செய்ய வேண்டாம். எந்த ஒரு பிரச்சனையையும் தீர ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும். தேவையில்லாத கோபத்திற்கு இடம் கொடுக்க வேண்டாம். எதிர்ப்பு ஓரளவு அகலும். காரியத்திலும் நல்ல அனுகூலம் இருக்கும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை கூடும். துணிச்சலுடன் செயல்பட்டு எடுத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். வருமானத்திற்கும் குறைவில்லை சீராக இருக்கும். தனவரவு கிடைப்பதில் மட்டும் சிக்கல் இருக்கும். முடிந்தால் ஆலய வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். இறைவனை வழிபட்டு எந்த ஒரு விஷயத்தையும் செய்யுங்கள். வெற்றி கிடைக்கும்.

காதலில் உள்ளவர்களுக்கு சிறப்பான தருணம் அமையும். முன்கோபம் தடுத்துவிடும். மாணவக் கண்மணிகள் முயற்சி எடுத்து பாடங்களை படிக்க வேண்டும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானம் கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் நல்லபடியாக முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வட மேற்கு. அதிஷ்ட எண் 6 மற்றும் 9. அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்.

Categories

Tech |