Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

சர்வ சாதாரணமா பண்றாங்க…. வீட்டுக்கு வந்து கத்தி குத்து…. கார் ஓட்டுநர் மரணம்….!!

வீடு தேடி வந்து கார் ஓட்டுநரை குத்திவிட்டு தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருவள்ளூர் மாவட்டத்தில்  உள்ள புதுச்சத்திரம் என்ற பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுனர் அசோக்குமார் (28). நேற்றிரவு இவரது வீட்டிற்கு வந்த சதீஷ் என்பவர் இவரை வெளியே வரவழைத்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றார். இதனால்   அசோக்குமார் வலிதாங்காமல் துடித்தார். அவரின் அலறல்  சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து, அசோக்குமாரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக கூறினர். இது குறித்து தகவல் அறிந்த வெள்ளவேடு போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் சதீஷின் தந்தை மற்றும் அவரது சகோதரரை கைது செய்துள்ளனர். மேலும் கொலையாளி சதீஷை தேடி வருகிறார்கள். இதனிடையே அசோக்குமாரின் உறவினர்கள் அவரின் உடலை கேட்டு திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |