நடிகர் சதீஷின் பெண்குழந்தை அவரது கையை பிடித்திருக்கும் அழகிய புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார் .
தமிழ் திரையுலகில் காமெடி கதாநாயகனாக வலம் வரும் சதீஷ்க்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது . இதையடுத்து இவருக்கு கடந்த மாதம் 4-ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது . இதனை ட்விட்டரில் தெரிவித்த சதீஷ்க்கு திரையுலகினரும் ரசிகர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தனர.
அப்பா – மகள் 😍😍😍 pic.twitter.com/e1p3hSgR9e
— Sathish (@actorsathish) December 13, 2020
இந்நிலையில் தற்போது முதல் முறையாக தனது குழந்தையுடன் சதீஷ் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவரது விரலை குழந்தையின் கையால் பிடித்திருப்பது போன்ற அழகிய புகைப்படத்தை அப்பா-மகள் என பதிவிட்டு ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் . தற்போது இணையத்தில் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது .