தனுசு ராசி அன்பர்களே…! உடல் ஆரோக்கியத்தை பொறுத்து எந்த ஒரு வேலையும் செய்வீர்கள்.
குழந்தைகளை நல்ல முறையில் அக்கறையுடன் கவனிக்க வேண்டும். அவர்களுக்கு தேவையானதை வாங்கிக் கொடுக்க வேண்டும். அவர்கள் மீது எந்த அழுத்தத்தையும் கொடுக்க வேண்டாம். வெளியூர் பயணம் பொழுது கவனம் வேண்டும்.மனதில் ஆதரவு மற்றும் அவருடைய பேச்சும் எதிர்ப்புகளை குறைக்கும். பணவரவு பொருத்தவரை சீராக இருக்கும். இடமாற்றம் வெளியூர் பயணம் அலைச்சலை கொடுக்கும். உடல் உழைப்பு அதிகமாக இருக்கும். வேலை வேலைக்கு சரியான உணவு வகைகளை எடுத்துக் கொள்ளுங்கள். தொழில் வியாபாரம் முன்னேற்றம் பாதையில் செல்லும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கட்டளை இடுகின்ற பதவி கிடைக்கும். சம்பள உயர்வு போன்ற நல்ல தகவல் வரும். நல்ல வேலை வாய்ப்பு வரக்கூடும். மாலை நேரத்தில் தொலைபேசி வழித் தகவல் மனதை ஊக்குவிக்கும். யாரை நம்பியும் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம்.
காதலில் உள்ளவர்கள் நிதானமான போக்கை அணுக வேண்டும். பேச்சில் நிதானம் வேண்டும். மாணவக் கண்மணிகளுக்கு கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் ஆரஞ்சு நிறம் உங்கள் அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.அப்படியே சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மாலை நேரத்தில் நெய்தீபம் ஏற்றி வந்தால் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்ட எண்-4 மட்டும் 7. அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறம்.