தேமுதிக தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், அவர் அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து சென்னை தேமுதிக தலைமை அலுவலகத்தில் நேற்று விஜயகாந்த் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது.
அதில், தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும். வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கையை உடனே பரிசீலிக்க வேண்டும். புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 40 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். மாநிலத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை மூட தேமுதிக தீர்மானம் செய்துள்ளது. மேலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை மத்திய அரசு குறைக்க வேண்டும் என்று பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.