Categories
உலக செய்திகள்

கொரோனாவை அடுத்த கொடிய நோய்… பெரும் அதிர்ச்சி செய்தி… 2 பேர் பலி…!!!

கொரோனாவை அடுத்து பரவ தொடங்கியுள்ள கொடிய நோயால் பாதிக்கப்பட்ட த5 பேரில் 2 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதி கட்ட சோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் தற்போது வரையில் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில் கொரோனா நோயிலிருந்து மீண்டு வரும் நோயாளிகள் புதிய நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். Mucormycosis எனப்படும் இந்த நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு 50 சதவீதம் இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது ஒரு பூஞ்சை தொற்று நோய். இந்த நோயிலிருந்து மீண்டு வரும் பெரும்பாலான நோயாளிகள் கண் பார்வையை இழக்கின்றனர்.

மேலும் இந்த நோயால் தற்போது வரை பாதிக்கப்பட்ட 5 பேரில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். குணப்படுத்தப்பட்ட இரண்டு பேரின் கண்பார்வை போய்விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய தகவல் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |