டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சேலத்தில் போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லியில் போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உள்ளிட்டவர்கள் ரிலையன்ஸ் பல்பொருள் அங்காடி முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களது இந்த போராட்டம் கார்ப்பரேட் நிறுவனங்களில் வாடிக்கையாளர்கள் பொருட்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்பதை அறிவுறுத்தியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த வளாகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் காவல்துறையினரின் தடுப்பையும் மீறி வளாகத்திற்குள் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்ட காரணத்திற்காக காவல்துறையினர் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து தற்போது வளாகத்தின் உள்ளே நுழைபவர்களை காவல்துறையினர் தூக்கிச் சென்று கைது செய்கின்றனர். தொடர்ந்து கோஷங்களை எழுப்பி போராட்டம் செய்வதால் காவல்துறையினர் ஒவ்வொருவராக வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்று காவல் வாகனத்தில் அடைகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.