Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல ஹீரோவின் படத்தில் அறிமுகமாகும் அருண் விஜய் மகன்… வாழ்த்தும் திரையுலகம்…!!!

நடிகர் அருண் விஜய்யின் மகன் பிரபல ஹீரோ படத்தில் நடிக்கவுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் .

தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் அருண் விஜய் கதாநாயகனாகவும் பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர். இந்நிலையில் இவரது மகன் அர்னவ் விஜய் சினிமாவில் நடிக்க உள்ளதாக அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதில் ‘உங்கள் எல்லா ஆசீர்வாதங்களுடன் எனது மகன் அர்னவ் விஜய் சினிமாவில் அறிமுகமாகிறார் என்று அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. நடிகர் சூர்யா அடுத்ததாக நடிக்க உள்ள திரைப்படத்தில் எனது மகன் அறிமுகப் படுத்தப்படுவார் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்’ என பதிவிட்டுள்ளார் . இந்த பதிவுக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர் .

Categories

Tech |