தேவாலயத்தின் முன் துப்பாக்கிசூடு நடத்தியநபரை காவல்துறையினர் சுட்டதில் அவர் உயிரிழந்தது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரின் செயின்ட் ஜான் கீ டிவைன் கதீட்ரல் தேவாலயம் உள்ளது. இத்தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, திடீரென தேவாலயத்தின் உள்ளே வந்த 52 வயது மதிக்கத்தக்க நபர் “என்னை கொல்லுங்கள்”,”என்னை கொல்லுங்கள்” என்று கூறிக்கொண்டே தேவாலயத்தின் முன் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த காவலர்கள் அங்கிருந்த மக்களை தேவாலயத்திற்குள் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். இதனைத்தொடர்ந்து காவலர்கள் துப்பாக்கி சூடு நடத்தி அந்நபரை பிடித்தனர். இதில் பலத்த காயமடைந்த அவரை அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் மரணம் அடைந்தார்.