Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

திமிரு தனமா பேசுறாங்க… எல்லாரும் உடனே வாங்க….. பாஜகவுக்கு எதிராக திமுக அதிரடி …!!

விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் வரும் 18ஆம் தேதி சென்னையில் திமுக கூட்டணி சார்பில் உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் சார்பாக வரக்கூடிய வெள்ளிக்கிழமை 18ஆம் தேதி வள்ளுவர் கோட்டம் அருகே ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று சொல்லியுள்ளார்கள். டெல்லியில் முற்றுகையிட்டு அறவழியில் அமைதியாக போராடிவரும் விவசாயிகள் முன் வைத்துள்ள கோரிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று சொல்லியிருக்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் அமைதி வழியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் மாவோயிஸ்டுகள் புகுந்து விட்டார்கள் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சொல்லி இருப்பதை கண்டித்தும் கூட்டணி கட்சி தலைவர்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். மேலும் விவசாயிகளுக்கு திமுக தலைமையிலான அனைத்துக் கட்சிகளும் உணர்வுபூர்வமாக தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதாகவும், விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தாலும், விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை இல்லாத சட்டங்களையும்,  இலவச மின்சாரத்தை ரத்து செய்ய கொண்டு வரப்படும் திருத்தங்களை திரும்பப் பெற முன்வரவில்லை எனவும் சொல்லி இருக்கிறார்கள்.

இதனால் வெள்ளிக்கிழமை வள்ளுவர் கோட்டத்தில் அருகே திமுக கூட்டணி கட்சித் தலைவர்களும், நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்கும் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என தெரிவித்திருக்கிறார்கள். மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று விவசாயிகள் சட்டங்களை எதிர்த்து கண்டனத்தை செப்டம்பர் மாதம் கூட திமுக கூட்டணி கட்சியினர் ஆலோசனை கூட்டம் நடத்தி, அதற்குப் பிறகு  சேலத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் பங்கேற்ற பெரிய அளவிலான பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |