Categories
தேசிய செய்திகள்

“மூளையில் ஆபரேஷன்” நடந்துகொண்டிருந்த போதே…. அசத்திய 9 வயது சிறுமி…!!

9 வயது சிறுமியின் மூளையில் அறுவை சிகிச்சையின் போது பியானோ வாசித்து அசத்தியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியபிரதேச மாநிலத்திலுள்ள குவாலியர் பகுதியில் வசித்து வரும் சிறுமி சௌமியா(9). இவருக்கு மூளையின் ஒரு பகுதியில் கட்டி இருந்ததுள்ளது. எனவே மூளையில் அறுவைசிகிச்சைக்காக பிர்லா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அந்த சிறுமிக்கு சுமார் 6 மணி நேரம் மூளையில் அறுவை சிகிச்சை நடந்துள்ளது. இதையடுத்து சிறுமியின் அறுவைசிகிச்சை குறித்து, மருத்துவர்கள் கூறுகையில், “இவருக்கு மூளையில் ஆபரேஷன் நடக்கும் போது மற்ற நரம்புகளுக்கும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

மேலும் சிறுமிக்கு இதுபோன்ற பெரிய அறுவை சிகிச்சை செய்வது மிகவும் கடினம். எனவே அவருடைய அறுவை சிகிச்சை awake craniotomy என்ற முறையில் செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் போது அவளிடம் பியானோ வாசிக்கச் சொன்னோம். அறுவை சிகிச்சை முடியும் வரை அவள் சுய நினைவுடன் தான் இருந்தார்” என்று தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவருடைய அறுவை சிகிச்சைக்கு பிறகு சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்த, அறுவை சிகிச்சை நிபுணர் அபிஷேக் சவுகான் இதுகுறித்து கூறுகையில், “இந்த அறுவை சிகிச்சை மிகவும் சவாலானது தான்.

ஆனால் எங்கள் அணியின் முயற்சியால் தான் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்திருக்கிறது” என்று  கூறியுள்ளார். பின்னர் இதுகுறித்து சிறுமி கூறுகையில், “நான் இப்போது நலமுடன் உள்ளேன். நான் குறைந்தது 6 மணி நேரம் பியானோ வாசித்தேன். மேலும் செல்போனில் விளையாடினேன். இப்போது நான் நன்றாக இருக்கிறேன்” என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

Categories

Tech |