சற்று முன்பு செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நீதி மைய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், வலுவான அரசியல் கட்சிகள் இருந்தாலும் என்னுடைய அரசியல் பயணத்தை நேர்மை வைத்து கொண்டு செல்வேன். மற்ற அனைத்துக் கட்சிகளிலும் நேர்மை இல்லை என்பதால் தான் நாங்கள் அரசியலுக்கே வருகின்றோம்.
நேர்மையாளர்கள் எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் ஏன் அங்கு இருக்கவேண்டும். நேர்மையான இன்னொரு கட்சியில் இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கேள்வி.
ஆளும் கட்சி மீது விமர்சனம் என்பது நான் சொல்லித்தான் தெரிய வேண்டும் இல்லை. தமிழ் நாடு எங்கும் எங்கள் புகழ் கூடும் என்பதும், மக்களிடம் எங்களின் செல்வாக்கு அதிகரிக்கும் என்பதால் வேண்டுமானால் அவர்கள் பதட்டமாக இருக்கலாம்.
திரையில் ரஜினியும் நீங்களும் வெற்றி பெற்றதைப் போன்று சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு. வாய்ப்பிருக்கிறது என்று என்பதை நாங்கள் சொல்லி ஒரு வருடம் ஆகிவிட்டது. அதற்கான நேரம் வர வேண்டும். முதலில் 31ஆம் தேதி பொறுத்திருந்து பார்த்துவிட்டு, அதற்கு பதில் சொல்வது சரியாக இருக்கும் என கமல் தெரிவித்தார்.