Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

இனிமேல் அப்படி பேசக்கூடாது…. எடப்பாடி போட்ட வழக்கு…. ஸ்டாலினுக்கு ஐகோர்ட் அட்வைஸ் …!!

தமிழக அரசு, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தமிழக அமைச்சர்களுக்கு எதிராக திமுக தலைவர் மு க ஸ்டாலின் பல்வேறு நிலைகளில் கருத்து தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் மீது தனிப்பட்ட முறையில் முதலமைச்சர் என்ற முறையிலும், தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த அவதூறு வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

ஏற்கனவே அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இறுதி விசாரணைக்காக இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது முதல்வருக்கு எதிராக ஸ்டாலின் என்ன மாதிரியான கருத்துக்களை தெரிவித்து இருந்தார் ? எதன் அடிப்படையில் கருத்து கூறினார் ? என்பதை நீதிபதிகள் கேட்டருந்தார்.

பின்னர், முதலமைச்சர் மீதும், அரசாங்கத்தின் மீது உள்ள குறைகளை சுட்டிக் காட்ட வேண்டுமே தவிர தனிப்பட்ட முறையில் விமர்சிக்கக் கூடாது என்று ஸ்டாலினுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தி இருந்தார்கள். இன்றும் சில வழக்குகள் வந்தபோது 3 வழக்குகளையும் ரத்து செய்துவிட்டு,  முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருந்தால் நீதிமன்றத்தை நாட வேண்டும்.

கருத்து சுதந்திரம் என்ற பெயரில் இது போன்றதொரு பேசக்கூடாது என்று நீதிபதி கூறினார். அதுமட்டுமல்லாமல் அவதூறு வழக்குகளை நீதிமன்றம் ரத்து செய்து விட்டதை உரிமையாக எடுத்துக் கொள்ளக்கூடாது. தமிழகத்தை பொருத்தவரை ஆரோக்கியமான அரசியலை உருவாக்க வேண்டும்.

ஆரோக்கியமான அரசியலுக்கு மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக  தமிழகம் திகழ வேண்டும். திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வரை மிகக் கடுமையாக விமர்சிப்பது தவிர்க்க வேண்டும் என்று வழக்கறிஞர் மூலமாக ஸ்டாலினுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தலை கொடுத்துள்ளார்கள்.

Categories

Tech |