Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இத பால், காபில கலந்து சாப்பிடுங்க… அப்புறம் பாருங்க அதிசயத்தை..!!

கசகசா விதையின் நன்மைகள் பற்றி இதில் பார்ப்போம்.

கசகசா விதைகள் இந்த நூற்றாண்டில் மட்டும் பிரசித்தி பெற்றதல்ல. ஆனால் இடைக்காலங்களில் இது மனதை அமைதிப்படுத்தும் தூக்கத்தை வரவழைக்கும் மயக்க மருந்தாக கருதப்பட்டதாக வரலாறு வெளிப்படுத்துகிறது. அழும் குழந்தைகளை அமைதிப்படுத்த அவர்கள் கசகசாவை பால் மற்றும் தேனுடன் கலந்து கொடுத்தார்கள். கசகசா விதைகள் பல்வகை உணவுகளில் சேர்க்கப்படும் புகழ்பெற்ற மூலப்பொருளாகும். கசகசா விதைகளின் சில நன்மைகளைப் பற்றிப் பார்ப்போம் வாருங்கள்.

செரிமானத்திற்கு நல்லது:

கசகசா விதைகளில் கரையாத நார்ச்சத்துக்கள் மிக அதிகமாக இருப்பதால் இது முறையான செரிமானத்திற்கு உதவுவதோடு மலச்சிக்கலை முற்றிலுமாக ஒழிக்கிறது. இது உடலின் இயக்க அமைப்பை மேம்படுத்தி அமிலத்தன்மை, நெஞ்செரிச்சல், வாயு உற்பத்தி போன்ற நோய்களிலிருந்து நிவாரணமளிக்கிறது.

கருவளத்தை மேம்படுத்துகிறது:

கசகசாவின் மருத்துவ குணம் பெண்களின் கருவளத்திற்கு நன்மை பயக்கிறது. கசகசா விதைகளின் எண்ணையயைப் பயன்படுத்தி கருக்குழாய் கழுவப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதன் பிறகு பெண்களில் கருவுறும் விகிதம் அதிகரிக்கிறது. இது கருக்குழாயிலுள்ள கருச் சிதைவுகள் அல்லது சளி போன்ற திரவ கசடுகளை நீக்குகிறது. இது சுமார் 40 சதவிகித பெண்களுக்கு நேர்மறையான விளைவுகளைக் காட்டியுள்ளது. மேலும், கசகசா விதைகள் உங்கள் பாலியல் விருப்பங்களை அதிகரித்து ஆண்மையையும் பாலுணர்ச்சியையும் அதிகரித்து பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

ஆற்றலை அதிகரிக்கிறது:

கடினமான வேலைகளை செய்வதற்கு ஆற்றல் அளவை அதிகரிக்க நமது உடலுக்கு போதுமான அளவு கார்போஹைட்ரேட்டுகள் தேவைப்படுகிறது. கசகசா விதைகள் கலப்பு கார்போஹைட்ரேட்டுகளின் வளமான ஆதாரமாக இருக்கிறது. மேலும் சோர்வுக்கு வழிவகுக்கும் கால்சியம் குறைபாடு ஏற்படும் போது இது போதுமான கால்சியத்தை உடல் கிரகித்துக் கொள்ள உதவுகிறது.

வாய்ப்புண்ணை குணப்படுத்துகிறது:

கசகசா விதைகளின் குளிர்ச்சியான மூலக்கூறுகள் உங்களுக்கு நன்மை தரக்கூடியது. இந்தப் பிரச்சனைக்கு கசகசாவை பொடித்த சர்க்கரை மற்றும் கொப்பரைத் தேங்காய்த் துருவலுடன் சேர்த்து சிறு உருண்டைகளாகப் பிடியுங்கள். இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வர உங்களுக்கு வாய்ப்புண்ணிலிருந்து நிவாரணம் பெற உதவுகிறது.

எலும்புகளை பலப்படுத்துகிறது:

நமது எலும்புகளின் வலிமைக்கு போதுமான கால்சியம் மற்றும் தாமிரச் சத்து தேவைப்படுகிறது. 40 வயதுக்குப் பிறகு எலும்புகள் தேயத் தொடங்குகின்றன. அப்போது மக்கள் கால்சியம் மாத்திரைகளை தேர்ந்தெடுக்கின்றனர். கசகசா விதைகள் எலும்புகளையும் அத்துடன் தொடர்புடைய திசுக்களையும் பலப்படுத்தக்கூடிய இயற்கையான மூலக்கூறு ஆகும். இதில் செறிந்துள்ள பாஸ்பரஸ் எலும்பு திசுக்களை உறுதிப்படுத்துகிறது. இதைத் தவிர கசகசா விதைகளில் அடங்கியுள்ள மாங்கனீசு எலும்புகளை தீவிரமான காயங்களிலிருந்து காக்கிறது.

நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது:

கசகசா விதைகளில் அடங்கியுள்ள இரும்பு மற்றும் துத்தநாகச் சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நுண்ணுயிர்களால் ஏற்படும் நோய்களுக்கு எதிராக போராட உதவுகிறது. இதில் உள்ள துத்தநாக மூலக்கூறுகள் சுவாசக் கோளாறுகளை சரிசெய்வதில் முக்கியமாக தொடர்பு கொண்டுள்ளது. மேலும் இந்த விதைகள் உடலில் நோயெதிர்ப்பு செல்களின் உற்பத்திக்கு உதவுகிறது.

இதயத்துக்கு நல்லது:

கசகசாவில் அடங்கியுள்ள துத்தநாகம் சுவாசக் கோளாறுகளை குறைக்க உதவுகிறது. இந்த கசகசா விதைகள் உண்ணக்கூடிய நார்ச்சத்து நிறைந்தது இது உடலில் கொழுப்புச் சத்துக்களை குறைத்து ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. அது மட்டுமன்றி கசகசா விதைகளில் அடங்கியுள்ள ஒமேகா – 3 மற்றும் ஒமேகா – 6 மூலக்கூறுகள் இதயத்தின் சீரான இயக்கத்திற்கு நன்மை புரிகிறது.

நீரிழிவு நோயை குணப்படுத்த உதவுகிறது:

கசகசா விதைகளின் ஏராளமான மருத்துவப் பயன்களுடன் இது இரத்தத்தில் சர்க்கரை அளவையும் முறைப்படுத்துகிறது. நீரழிவு நோயாளிகளுக்கு கசகசா விதைகளில் அடங்கியுள்ள உயர் அளவு நார்ச்சத்தும் மாங்கனீசும் சர்க்கரை நோய்க்கு குணமளிப்பதற்கு சிறந்தது.

கேன்சரைத் தடுக்க உதவுகிறது:

ஓபியம் கசகசா விதைகளிலிருந்து பிரத்தெடுக்கப்படும் நாஸ்காபைன் என்றழைக்கப்படும் ஒரு மருந்து மூளைக்கட்டிகளையும் மற்றும் மார்பக மற்றும் புராஸ்டேட் கேன்சர் செல்களுக்கு சிகிச்சையளிக்க சிறந்த திறன் வாய்ந்த விளைவுகளை ஏற்படுத்துவதைக் காண முடிகிறது.
கசகசா விதைகளிலுள்ள கார்சினோஜென் என்னும் நச்சுகளை நீக்கும் நொதியும் குளுடதைன் (ஜிஎஸ்டி) என்னும் கடத்தியும் கிட்டத்தட்ட 78 சதவிகிதம் வரை கேன்சர் செல்கள் பரவுவதை தடுக்கிறது. மேலும் இந்த கசகசா செடியின் தாய்த்திரவம் கூட கேன்சர் புண்களுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது.

தீவிரமான கண் நோய்களைத் தடுக்கிறது:

கசகசா விதைகள் உங்கள் பார்வைத்திறனை மேம்படுத்துகிறது மேலும் கண் பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. கசகசா விதைகளில் அடங்கியுள்ள ஆன்டி ஆக்சிடன்ட்டுகளும் மற்றும் துத்தநாகமும் தீவிர கண் பிரச்சனையான கருவிழி படலத்தின் நசிவால் ஏற்படும் குருட்டுத்தன்மையை தடுக்க உதவுகிறது.

தூக்க பிரச்சனைகளை குணமாக்க உதவுகிறது:

நீங்கள் அளவுக்கதிகமான மன அழுத்தம் மற்றும் பதற்றத்தில் உள்ளவர்களுக்கு ஒரு குவளை கசகசா பானம் குடிக்கக் கொடுத்தால் அது கார்டிசால் அளவைக் குறைத்து உங்கள் உடலை அமைதிப்படுத்துவதன் மூலம் மன அழுத்த அளவைக் குறைக்கிறது. கசகசா அதிலும் குறிப்பாக ஓபியம் கசகசா போதுமான தூக்கத்தை தூண்டுகிறது. கசகசா விதைகளில் தேநீர் தயாரித்துக் குடியுங்கள் அல்லது கசகசாவை பேஸ்டாக அரைத்து வெதுவெதுப்பான பாலில் கலந்து இரவில் படுக்கப் போவதற்கு முன் குடியுங்கள். இது உங்கள் துக்கமற்ற இரவுகளின் பிரச்சனையை முற்றிலும் ஒழித்துவிடும்.

மேலும், உங்கள் குழந்தைக்கு கசகசா விதைகளை கொடுப்பதற்கு முன் ஒரு குழந்தை நல சிறப்பு மருத்துவரை கலந்தாலோசியுங்கள். இதனால் அவர்களுடைய உடலில் தீங்கான விளைவுகள் ஏற்படாமல் தடுக்க முடியும்.

Categories

Tech |