பிக்பாஸ்-4 நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரோமோவில் அனிதா மற்றும் ரியோ இடையே வாக்குவாதம் நடக்கிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . கடந்த வாரம் யாரும் எதிர்பாராதவிதமாக டபுள் எவிக்சன் நடைபெற்று இருவர் வெளியேற்றப்பட்டனர். அதில் அர்ச்சனாவின் அன்பு டீமில் இருந்த ஜித்தன் ரமேஷ் மற்றும் நிஷா வெளியேறியதால் அந்த குரூப்பில் இருந்தவர்கள் சோகத்தில் இருந்தனர் . இந்நிலையில் இன்று வெளியான முதல் புரோமோவில் வீட்டுக்குள் ஓபன் எவிக்ஷன் நடைபெறுகிறது .
இதையடுத்து வெளியாகியுள்ள இரண்டாவது புரோமோவில் ரியோ தன்னைப்பற்றி கூறிய ஒரு கருத்துக்கு விளக்கம் கேட்கிறார் அனிதா . வழக்கம்போல் அதுக்கு ஒரு காரணத்தை சொல்லி விலக முயல்கிறார் ரியோ . உடனே ‘ஏன் பேச தைரியம் இல்லாமல் போறீங்க’ என்று அனிதா கேட்க டென்ஷனான ரியோ ‘தைரியம் இல்லன்னு சொல்ற வேலையெல்லாம் வச்சிக்கிடாத’ என்கிறார் . இன்னும் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிய ஒரு மாதம் மட்டுமே இருக்கும் நிலையில் இனிவரும் எபிசோடுகள் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .